ஏதோ ஓர் உடல்நலக் கோளாறு. மருத்துவரிடம் செல்கிறார் ஒருவர். அவருக்கு வயது 40-ஐத் தாண்டியிருந்தால், மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி...
'சுகர் இருக்கா?' என்பதுதான். இன்றைக்கு 35 வயதைக் கடந்துவிட்டாலே சர்க்கரைநோய் இருக்குமோ என்கிற சந்தேகம் பரவலாகிவருகிறது. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. மாறிவரும் வாழ்க்கை முறை, முறைப்படுத்தப்படாத உணவு முறை, மன அழுத்தம்... என எத்தனையோ காரணங்களை அடுக்கலாம். இதுவே சர்க்கரைநோய்க்கு ஆளானவர்களாக இருந்தால், 'பால் சேர்க்காதீங்க... பழம் சாப்பிடாதீங்க' என உடன் இருப்பவர்களிடம் இருந்து அசால்ட்டாக வந்துவிழும் அட்வைஸ் மழை! ஆரம்பகட்ட நிலையில் இருந்தாலும் சரி, காலையில் பல்துலக்கும் காரியம்போல இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொள்ளும் அபாயகரமான நிலையில் இருப்பவராக இருந்தாலும் சரி... சிலவற்றைச் சாப்பிடுவதன் மூலமாகவே சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தலாம்.
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
வரக்கொத்தமல்லி - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும்.
பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
No comments:
Post a Comment