மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (எஸ்எஸ்சி) 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த பட்டதாரி அளிவிலான தேர்வு, 2022(நிலை-1)-க்கான அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டும். இணையதளம் மூலம் அக்டோபர் 1 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். எழுத்துத் தேர்வு 2022 டிசம்பர் மாதம் நடைபெறும்.
ஒருங்கிணைந்த மேல்நிலை(10+2) அளவிலான தேர்வு(முதல் நிலை) 2022-க்கான அறிவிப்பு வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்படும். டிசம்பர் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மாதம் 2023 ஜனவரி-பிப்ரவரி மாதம் நடைபெறும்.
இளநிலை பொாறியாளர் (முதல் தாள்) தேர்வு, 2022-க்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டும். இணையதளம் மூலம் செப்டம்பர் வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு 2022 நவம்பர் மாதம் நடைபெறும்.
காவலர் நிலையிலான பணிகளுக்கான அறிவிப்பு (மத்திய ஆயுதக் காவல்படை, அசாம் ரைபிள்) வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும். 2023 ஜனவரி 19 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2023 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் எழுத்து தேர்வு நடைபெறும்.
சார்-ஆய்வாளர் பணி-2022-க்கான (தில்லி காவல்துறை, சிஏபிஎஃப்) அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி தேர்வு 2022(முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டும். செப்டம்பர் 5 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
பன்னோக்கு(தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு 2022-க்கான அறிவிப்பு 2023 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்படும். பிப்ரவரி 24 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2023 ஏப்ரல் - மே மாதங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
No comments:
Post a Comment