Saturday, July 16, 2022

முக கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை... கலெக்டர் எச்சரிக்கை..!!!!

தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது . ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் ஒரு பள்ளிக்கூடம் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாக கூறப்படுகின்றது. 

மேலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் சமீப காலமாக பள்ளிகளில் ஆய்வு செய்யும் போதெல்லாம் ஆசிரியர்கள் முக கவசம் அணியாமல் பணியாற்றுவதை கண்டு அவருக்கு அறிவுரை வழங்கி வந்துள்ளார் .

இருப்பினும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவை பொதுமக்களும், பள்ளி ஆசிரியர்களும் அலட்சியம் செய்து வருவதால் முக கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது இனி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று கலெக்டர் முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு அவர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். மாணவ மாணவிகளை முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும். 

முக கவசம் அணியாத ஆசிரியர்களுக்கு அபராதம் விதிப்பதோடு துறைவாரியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment