Saturday, July 9, 2022

தூங்குவதற்கு முன்பு தண்ணீர் எவ்ளோ குடிச்சா எந்தந்த நோயிலிருந்து தப்பிக்கலாம் தெரியுமா?

நாம் நலமாக வாழ நம்முடைய உள்ளுறுப்புக்கள் மற்றும் புறஉறுப்புக்கள் ஆரோக்கியான நிலையில் இருப்பது மிகவும் அவசியமானது.

நாம் சில செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது, அவை நம்முடைய உடல் உறுப்புகளைப் பாதிப்படையச் செய்வதோடு நம்முடைய ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கிறது.



உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் எவை? அவை எவ்விதம் உடல்உறுப்புகளைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பார்ப்போம்.

உடல்உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் மற்றும் பாதிப்புகள்

காலை உணவினை புறக்கணிக்கும்போது வயிறு சேதாரமடைகிறது.

ஒரு நாளைக்கு 10 டம்ளர் தண்ணீர் அருந்தவில்லை எனில் நம்முடைய சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன.

இரவு 11 மணிவரை விழிந்திருந்து சூரியோதயத்தைப் பார்க்காமல் நாம் உறங்கும் போது நம்முடைய பித்தப்பை சேதாரமடைகிறது.

குளிர்ந்த பழைய உணவினை உண்ணும் போது நம்முடைய சிறுகுடல் பாதிக்கப்படுகிறது.

எண்ணெயில் பொரித்த, கார மசாலா உணவுகளை உண்ணும் போது பெருங்குடல் பாதிக்கப்படுகிறது.

சிகரெட் புகையால் மாசுபடுத்தப்பட்ட காற்றினை சுவாசிக்கும் போது நம்முடைய நுரையீரல்கள் பாதிக்கப்படுகின்றன.

வறுக்கப்பட்ட துரித வகையான உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பாதிக்கப்படுகிறது.

அதிகப்படியான உப்பு மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவினை உண்ணும் போது நம்முடைய இதயம் பாதிக்கப்படுகிறது.

அளவுக்கு அதிகமான இனிப்புப் பொருட்களை உண்ணும் போது கணையம் பெரும் பாதிப்பைச் சந்திக்கிறது.

இருளில் மொமைல் போன் மற்றும் கணினியை இயக்கும் போது கண்கள் பெருமளவு பாதிப்படைகின்றன.

எதிர்மறையான எண்ணங்களை அதிகளவு சிந்திக்கும் போது மூளை பாதிப்படைகிறது.

இவ்வாறான பாதிப்புகளைச் சந்திக்கும் நம்முடைய உறுப்புகளை சந்தையில் மாற்றுப் பொருளாக வாங்கி உபயோகிக்க இயலாது.

ஆதலால் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பாதுகாக்க விரும்புவோர் நல்ல உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான செயல்முறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.

தண்ணீரை அருந்தும் முறை

தண்ணீர் எல்லோருக்கும் அத்தியவசியமான ஒன்று. அந்த தண்ணீரை எந்த வேளைகளில் எவ்வளவு குடிப்பதால் பயன் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

உடல் உள்உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்க தினமும் தூங்கிய எழுந்த பின்பு 1 டம்ளர் தண்ணீரைக் கட்டாயம் அருந்த வேண்டும்.

ஒவ்வொரு வேளை உணவிற்கும் அரைமணி நேரத்திற்கு முன்பாக 1 டம்ளர் தண்ணீர் அருந்த செரிமானம் நன்கு நடைபெறும்.

உணவு அருந்தும் போதும், உணவு அருந்திய அரை மணி நேரத்திற்கும் தண்ணீரைக் கண்டிப்பாக அருந்தக் கூடாது.

நாம் குளிப்பதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீரை அருந்துவதால், உடலில் இரத்த அழுத்தம் சீராக்கப்படுகிறது.

நாம் தூங்குவதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீரை அருந்துவதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பினைக் குறைக்கலாம்.

சரியான அளவு தண்ணீரை சரியான நேரத்தில் குடித்து உடல் ஆரோக்கியம் பேணுவோம்.

No comments:

Post a Comment