பொதுவாக உடலுக்கு கொழுப்பு சத்து என்பது அத்தியாவசியமான ஒன்றுதான், அது அளவுக்கதிகமாக இருக்கும்பொழுது தான் நமக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும், ஒன்று ஹெச்டிஎல் அதாவது நல்ல கொலஸ்ட்ரால் மற்றொருன்று எல்டிஎல், இது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். அதிகளவிலான எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவதால் நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது, இது உடலுக்கு ஆபத்தானது. ஆனால் நல்ல கொலஸ்ட்ரால் உடலில் இருப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது, குறிப்பாக இதய சம்மந்தமான நோய்கள் ஏற்படும் அபாயத்தை நல்ல கொலஸ்ட்ரால் குறைக்கிறது. நமது உடலில் நல்ல கொலஸ்டராலின் அளவை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
நியாசின் நிறைந்த உணவு :
நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும் ஒரு மருந்து வகை தான் நியாசின்(வைட்டமின் பி3), இவை நமது உடலிலுள்ள கெட்ட கொலஸ்டராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்டராலின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. நியாசின் சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது அதனால் மருந்து மூலமாக எடுத்துக்கொள்வது மட்டுமல்லாது நியாசின் நிறைந்துள்ள உணவை சாப்பிடலாம். விலங்குகளின் கல்லீரல், டூனா மற்றும் சால்மன் போன்ற மீன்களிலும், காளான், உருளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளிலும் நியாசின் நிறைந்துள்ளது.
உடற்பயிற்சி :
சுறுசுறுப்பான வாழ்க்கை முறை பல்வேறு நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது, அதிகமாக உடல் செயலில் ஈடுபடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் மட்டுமே உடலில் தங்கும். தினமும் 20-30 நிமிடங்களில் நடைப்பயிற்சி, ஓடுதல், கார்டியோ பயிற்சிகள் போன்றவற்றை செய்வதன் மூலம் பலனை பெறலாம்.
நட்ஸ் வகைகள் :
பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், நார்சத்துக்களும் நிறைந்துள்ளது. நார்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் தாங்குகின்ற கெட்ட கொழுப்புகள் முற்றிலும் குறைக்கபடுகிறது. முந்திரி சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதாக ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை நிர்வகித்தல் :
உடல் எடையை வயதுக்கேற்ப சரியான அளவில் வைத்துக்கொள்வது நல்லது, உடல் எடை அதிகமாகி இருப்பவருக்கு இதயம் சம்மந்தமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்கள் உடலில் மூன்று சதவீதம் கொழுப்பை குறைப்பதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
No comments:
Post a Comment