Wednesday, July 13, 2022

வெதுவெதுப்பான நீரில் ஏலக்காயை சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா ?

சர்வதேச அளவில், ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது. அதன் சுவை, மணம் உள்ளிட்ட பண்புகளால், பானங்கள் முதல் இனிப்பு வகைகள் வரை தயாரிக்க ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்களும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.இந்திய உணவு வகைகளுக்கு ஏலக்காய் மணம், சுவையை அளிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டு உள்ளது. 

பழங்காலம் தொட்டு இது இந்திய சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. 

வாயில் ஏற்படும் தொற்றுக்கள், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், மார்பு பகுதியில் ஏற்படும் சுணக்கங்கள், வாயு சம்பந்தமான கோளாறுகள், விஷக்கடி உள்ளிட்டவைகளுக்கு ஏலக்காய் சிறந்த தீர்வு அளிப்பதாக நம்பப்படுகிறது



ஒரு நாளைக்கு எவ்வளவு ஏலக்காய் சாப்பிட வேண்டும்?

ஏலக்காயை ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்வது நன்மை பயக்கும்.

ஏலக்காய் சாப்பிட சரியான நேரம்

இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் 2 ஏலக்காயை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.

நன்மைகள்

நன்றாக விருந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு வாயில் ஒரு ஏலக்காயை போட்டு மென்று சாப்பிட்டால், அவை வலுவான பூண்டு அல்லது வெங்காய வாசனையை கூட அகற்ற உதவுகின்றன. ஏனென்றால் ஏலாக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை அகற்ற உதவுகின்றன.

ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் டையூரிடிக் பண்புகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

ஏலக்காய் விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலமாக மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.

வயிறு தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க ஏலக்காயின் உதவுகின்றது. ஏனெனில் ஏலக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சாறுகள் பல்வேறு வகையான பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும்.

குமட்டல் அல்லது வாந்தி சங்கடம் உங்களுக்கு எற்பட்டால், வாயில் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காயை போட்டு மெதுவாக மெல்ல வேண்டும். அவ்வாறு செய்வது நிம்மதியைத் தரும்.

No comments:

Post a Comment