கோடை விடுமுறைக்கு பின் தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றை விநியோகிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ரூ.206 கோடி செலவில் 3 கோடியே 51 லட்சத்து 95 ஆயிரம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், இன்னும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை என பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில், காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் விநியோகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த புகார்கள் தொடர்பாக வரும் 15-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment