நாட்டில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக உள்ளதால் வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
பல நாடுகளும் தங்களது முதலீடுகளை டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து, பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.
ஆனால், பண மதிப்பு வீழ்ச்சியடைவதால் ஏற்படும் தாக்கம் சீரானதல்ல. தேவை மற்றும் உற்பத்தி வழங்கலைப் பொருத்து அவை மாறுபடுகிறது. பண மதிப்பு வீழ்ச்சியடைவதால் ஏற்படும் தாக்கம், நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளர் என நபருக்கு நபர் மாறுபடுகிறது.
நீங்கள் நுகர்வோர் எனில்,
பணவீக்கத்தால் அனைத்து இறக்குமதி பொருள்கள் மீதும் புதிய விலையேற்றத்தை சந்திக்கக்கூடும்.
ஏற்றுமதியாளர் எனில்,
விலையை குறைத்து பெரும் மதிப்புள்ள தயாரிப்புகளை விற்கலாம். மாற்றாக அதே அளவிலான விற்பனைக்கு டாலர் மதிப்பில் அதிக லாபம் கிடைக்கும்.
வெளிநாட்டு கல்லூரி மாணவர் எனில்,
முன்பு இருந்த கட்டணத்தைச் செலுத்த ஒரு பெரிய தொகையைக் கொடுக்க வேண்டி இருக்கும்.
சுற்றுலா பயணி எனில்,
டாலருக்கு எதிராக பல நாணயங்களின் மதிப்பு மாறுபடும். இதனால், விமானம் மற்றும் விடுதி முன்பதிவுகளுக்கு அதிக அளவிலான டாலர் மதிப்புகளை செலவிட நேரிடும்.
பகுதிநேர ஊழியர் எனில்,
உங்கள் பணிக்கான தொகை டாலரில் இருந்தால் அதிக பணம் கிடைக்கும். ஆனால் வேறு சில நாணயங்களின் மதிப்புகளும் வலுவிழந்திருப்பதால் உங்களுக்கு அதிகப் போட்டி இருக்கலாம்.
டாலர் வைப்புடைய இந்திய முதலீட்டாளர்:
ரூபாய் மதிப்பில் பங்குகளின் மதிப்பு 7% அதிகரித்திருக்கும்.
அமெரிக்க பங்கு முதலீட்டாளர்:
அமெரிக்க பங்குச்சந்தையான டாவ் ஜான்ஸ் குறியீடு 14% குறைந்துள்ளது. ஆனால் ரூபாய் மதிப்பில் இழப்புகள் 8% குறைவாக உள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதால் என்னென்ன செய்ய முடியும்!
நுகர்வோர்:
இறக்குமதி பொருள்களை வாங்காமல் உள்ளூர் பொருள்களை அதிகம் வாங்கலாம்.
வெளிநாட்டு மாணவர்: சொந்த நாட்டுக்கு திரும்பும் முன்னர், முடி திருத்தம் செய்துகொண்டு, தேவையான ஆடைகள், பொருள்கள் என அனைத்தையும் வாங்கிக்கொள்ளலாம். குறைந்த செலவில் தேவையானவைகளைப் பெறலாம். சொந்த நாட்டுக்குத் திரும்பியதும், இவற்றை செய்ய அதிக பணம் தேவைப்படும்.
சுற்றுலா பயணி:
பயணம் மேற்கொள்ளவுள்ள நாட்டின் நாணய மதிப்பு மேலும் தேய்மானம் அடைந்திருந்தால் (உதாரணமாக துருக்கி), அந்த நாட்டில் நேரடியாக முன்பதிவு செய்வதன் மூலம் சிறந்த சலுகைகளைப் பெறலாம்.
டாலரில் முதலீடு செய்தவர்: மதிப்பு அதிக உச்சம் பெற காத்திருக்கலாம். மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால், வணிகத்தில் அதிக அளவிலான பங்குகள் கிடைக்கும்.
சொந்தமாக தொழில் செய்பவர்: பணவீக்கம் அதிகமாக உள்ளதால், அதிக பணம் செலவிடுவதைத் தவிர்க்க சர்வதேச சப்ளையர்களிடம் பேரம் பேசலாம்.
கொள்கை வகுப்பவர்கள் (பாலிசிமேக்கர்ஸ்): கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் தளர்த்தி அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம்.
No comments:
Post a Comment