Monday, July 11, 2022

வீட்டில் கொய்யா மரத்தை வளர்க்கலாமா.?!

கொய்யா மரத்தின் இலை, பழம், வேர், பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

மேலும் சிறிய அளவிலான, அதேசமயம் மிகுந்த ருசியான பழங்களைத் தரக்கூடியது கொய்யா மரம் தான்.

கொய்யா என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுவது கொய்யாப்பழம் ஆகும். மலிவு விலைக்கு விற்கப்படும் கொய்யாப்பழம் பெரும்பாலும் அனைத்துக் காலங்களிலும் கிடைக்கும். கொய்யாப்பழம் ஒருவிதமான நறுமணத்தைக் கொண்டிருக்கும். இப்பழத்தில் பலவகைகள் உள்ளன.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து போன்ற தாது உப்புகளும் இதில் உள்ளது.

கொய்யா மரத்தின் இலைகளில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும், எண்ணற்ற மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.

கொய்யா இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம் சோடியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் உயர்தரமான ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.

கொய்யா மரத்தின் பட்டை காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினைக் குணப்படுத்தும்.

எங்கு வளர்க்கலாம்?

கொய்யா மரத்தை வீட்டு தோட்டங்களிலும், வயலின் வரப்புகளிலும் வளர்க்கலாம்.

எந்த திசைகளில் வளர்க்கலாம்?

வீட்டின் தென்மேற்கு பகுதி, தெற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் கொய்யா மரங்களை வளர்க்கலாம்.

No comments:

Post a Comment