Saturday, May 27, 2023

தகவல் தொழில்நுட்ப ம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறன் மிக்கவர்களுக்கு ரஷ்யாவில் அதிக வேலைவாய்ப்பு

இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ) கோவை கிளை தலைவர் ராமலு தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய ரஷ்யா நாட்டின் தென்னிந்தியாவுக்கான தலைமை தூதரக அதிகாரி ஒலெக் அவ்தீவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நட்புறவு சிறப்பாக உள்ளது. இருநாடுகள் இணைந்து தயாரித்துள்ள 'பிரமோஸ்' அதிவேக ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி உள்ளிட்ட பல வழி முறைகளில் ஏவப்படக்கூடிய தன்மை கொண்டது. பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேளாண், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரஷ்யாவில் அதிக திறமை வாய்ந்த வல்லுநர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள திறன்மிக்க மனிதவளம் முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதை கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து ரஷ்ய நாட்டுக்கு பணியாற்ற செல்ல விரும்பும் பல்துறை வல்லுநர்களுக்கு விசா வழங்குவதில் தொடங்கி தேவையான உதவிகள் தூதரகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள், எல்பிஜி, பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்த கமிஷனின் பரிந்துரைப்படி ரஷ்யா 500 பொருட்களை இந்தியாவிடம் இருந்து வாங்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினர் சரியான முறையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தொழில்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்திய தொழில் வர்த்தக சபை கோவை துணைத் தலைவர் சுந்தரம், செயலாளர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

மாலை நேரத்தில் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்லன்னா பணப் பிரச்சனையை சந்திப்பீங்க!!

இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில், அனைத்து முக்கிய பண்டிகைகள் மற்றும் விஷேச நாட்களில் தானம் அளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தான தர்மமின்றி கடவுளை மட்டும் வணங்குவதால் எவ்வித பலனும் கிடைக்காது. தானம் செய்வதாக இருந்தால், அதை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்வது தீமையைத் தருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் பின்வரும் பொருட்களை தானம் செய்வது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வரும்.

உடை, காலணிகள்

பல பெண்களுக்கு வெளியே செல்லும் போது தெரிந்தவர்களிடம் விருப்பமான அணிகலன்களை வாங்கி அணியும் பழக்கம் இருக்கும். ஜோதிடத்தின் படி, எப்போதும் ஒருவர் மற்றவர்களின் உடைகளை, காலணிகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை வாங்கி அணியக்கூடாது. இதன் காரணமாக, அந்த நபரின் எதிர்மறை ஆற்றல் உங்களுக்குள் வந்துவிடும். அதோடு இது அலர்ஜி பிரச்சனையையும் ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களின் பொருளை வாங்கிப் பயன்படுத்தினாலும், வாங்கிய பொருட்களை மாலை வேளையில் திருப்பித் தர வேண்டாம்.

கைக்கடிகாரம்

மாலையில் கைக்கடிகாரத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களிடம் வாங்கினாலும், அதை மாலை வேளையில் திருப்பித் தர வேண்டாம். இல்லாவிட்டால், நீங்கள் சிக்கலில் மாட்டி கஷ்டப்படுவீர்கள்.

கடன் கொடுக்காதீர்

சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் யாருக்கும் எக்காரணம் கொண்டும் கடன் கொடுக்காதீர்கள். மாலை வேளையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வரும் நேரமாக கூறப்படுகிறது. எனவே இந்நேரத்தில் கடன் கொடுக்காதீர்கள். இல்லையென்றால் வீட்டில் வறுமை அதிகரிக்கலாம்.

புளிப்பான பொருட்களைக் கொடுக்காதீர்

மாலையில் எக்காரணம் கொண்டும் புளிப்பான பொருட்களான தயிர், ஊறுகாய் போன்றவற்றைக் கொடுக்க வேண்டாம். இதன் காரணமாக, உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி தேவி அவர்களின் வீட்டிற்கு சென்றுவிடுவார். இதனால் உங்கள் வீட்டில் பணப்பிரச்சனை அதிகரிக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் ஒரு மங்களகரமான மற்றும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. அதோடு மஞ்சள் லட்சுமி தேவி குடியிருக்கும் பொருளாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட மஞ்சளை மாலை வேளையில் மற்றவருக்கு கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி அவர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்.

உப்பு

மாலை வேளையில் எப்போதும் யாருக்கும் உப்பை கொடுக்காதீர்கள். உப்பு மகாலட்சுமியின் அம்சம். இதை மற்றவர்களுக்கு கொடுத்தால், வீட்டில் பணப்பிரச்சனை மற்றும் பண இழப்பை சந்திக்க நேரிடும்.

Tuesday, October 4, 2022

கோழி, செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு

கால்நடைத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தொழில்முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது, புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதலாகும்.

கால்நடைகள் சார்ந்த தொழில் மேற்கொள்ள முனைவோர் இத்திட்டத்தில் பங்கேற்று கால்நடை பெருக்கத்தில் பங்கு பெற்று பயன் பெறுமாறு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; இத்திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க முனைவோர் 1000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் + 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகப்பிற்காக ஓராண்டில் 2000-2400 மெட்ரிக் டன் வைக்கோல் / ஊறுகாய் புல் /ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம் / தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

யார் பயன்பெறலாம்?

இத்திட்டத்தின் கீழ் தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவர். முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும்.

தொழில்முனைவோர்/தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும், திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும்.

பயன் பெற விரும்புவோர் https://nim.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின் படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும். பின்னர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் இரு தவணைகளில் வழங்கப்படும்.

திட்டம் தொடர்பான முழுமையான தகவல்கள் கீழ் இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

nlm.udyamimitra

Tamil Nadu Livestock Development Agency (TNLDA)

OPERATION GUIDELINES

மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள்,பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் சென்னை, தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!!

படித்தவர்கள் படிக்காதவர்கள் போன்ற பலரிடமும் ஏடிஎம் கார்டுகள் தற்போது உள்ளன.ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் பல பேர் ஏடிஎம் பின் நம்பர் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பிறந்த நாள் வண்டி நம்பர் அல்லது வருடம் இதுபோன்று மூன்றாவது நபர்கள் எளிதில் வியூகிக்கக்கூடிய pin நம்பர்களையே வைத்திருக்கின்றோம்.

வங்கிகள் சார்பில் கூட இது போன்ற பிறர் எளிமையாக கண்டுபிடிக்க கூடிய பாஸ்வேர்டை வைக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
இருப்பினும் பலர் இதுபோன்ற எளிதான பாஸ்வேர்டுகளை வைத்திருக்கின்றன.

அவ்வாறு எளிதாக ஏடிஎம் கடவுச்சொல் வைத்திருப்பவர்களுக்கான ஓர் உதாரண செய்தி தான் இது.திருவண்ணாமலையைச் சேர்ந்த ரேவதி என்னும் பெண் ஒருவர் விடுமுறைக்காக சென்னை வந்துள்ளார்.அங்கு அவரது கைப்பையை தொலைத்துள்ளார்.அந்தப் பையனுள் இருந்த ஆதார் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகளை கைப்பற்றிய கொள்ளையர்கள்,ஆதார் கார்டில் இருந்த அந்தப் பெண்ணின் பிறந்த தேதியை ஏடிஎம் பாஸ்வேர்டாக போட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணின் ஏடிஎம் பாஸ்வேர்ட் அவரின் பிறந்த தேதியாக இருந்ததனால் அந்த கொள்ளையர்கள் அவரின் அக்கவுண்டில் இருந்து 50 ஆயிரம் பணத்தினை திருடிச் சென்றுள்ளனர்.இது தொடர்பாக அப்பெண் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.அந்த ஏடிஎம் கார்டையும் வங்கி தரப்பில் முடக்கப்பட்டுள்ளது.

வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகள் அமல்

வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், 'சர்வர் அப்டேட்' பணிகளால் ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன.வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு, சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில், புதிய நடைமுறையை ஏற்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசு, வாரிசு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய அரசாணை(எண்:478) வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுவரை, இறந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் (மகன் இறந்திருந்தால், மருமகள் மற்றும் பேரன், பேத்தி) வாரிசுகளாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.இனி, கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவர். சான்றிதழில், உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்துவிட்டனரா என்று மட்டும் தெளிவாக குறிப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் அல்லது மகள் இறந்திருந்தால், அவரது வாரிசுதாரர் தனியே வாரிசு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.திருமணம் ஆகாதவர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவர். ஒருவர், ஏழு ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போயிருந்தால், கோர்ட்டில் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக 'சர்வர் அப்டேட்' பணிகள் நடப்பதால், விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்துள்ளன. 

விரைவில், சீரமைக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும்.வாரிசுகள், 18 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர்களின் பாதுகாவலர் அல்லது இறந்தவரின் சகோதரர் அல்லது சகோதரிகள் விண்ணப்பிக்கலாம். தாசில்தார் வழங்கிய வாரிசு சான்று தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதன்பின், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மகளிர் இலவச டிக்கெட்டுக்கு இனி காசு வாங்கலாம்.. - போக்குவரத்து துறை.!

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை நடத்துனர்கள் மற்றும் பிற ஆண் பயணிகள் இழிவாக நடத்துவது அன்றாடம் தொடர்ந்து வரும் ஒரு விஷயம்தான்.

சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் தானே பயணிக்கிறீர் என்று ஒரு பெண் பயணியை பார்த்து கேட்டது வீடியோவாக பரவி சச்சையானது. இதனை தொடர்ந்து தற்போது இலவசத்தில் பயணிக்க மாட்டேன் என்று பெண்கள் சபதம் எடுத்து பேருந்துகளில் கட்டணம் கொடுத்து பயணச்சீட்டு பெறுகிறார்கள்.


இந்த விஷயம் ஆளும் கட்சிக்கு எதிராக கிளம்பிய நிலையில், என்னசெய்வது என்று தெரியாமல் அரசு விழிபிதுங்கி நின்றது.

இந்த நிலையில், தற்போது அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டை பணம் கொடுத்து தான் பயணம் செய்தேன் என்று ஏதாவது பெண்கள் விருப்பப்பட்டால் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுங்கள் என்று போக்குவரத்து துறை அனைத்து நடத்துனர்களுக்கும் வாய்மொழியாக அறிவுறுத்தி உள்ளது

ரேஷன் விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆளெடுப்பு; அக். 13 முதல் விண்ணப்பிக்கலாம்!

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு அக். 13ம் தேதி முதல் நவ. 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் குழு உறுப்பினர்கள், கூட்டுறவு கடைகளின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு தொடர்புடைய விதிகளில் சில திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கான விற்பனையாளர், கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

வெவ்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு காலவரையறை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆள்சேர்ப்பு நிலையத்தில் தங்களால் நியமனம் செய்யப்பட வேண்டிய ஒரு வருவாய்க் கோட்டாட்சியரை தாங்களே உடனடியாக நியமனம் செய்து ஆணை வழங்க வேண்டும். அந்த ஆணையின் நகலினை தங்களுடைய மாவட்டத்திற்கு தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ள மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலருக்கு கூர்நோக்குடைய மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்.

கொரோனா தொற்றுக்குப் பின்னராக இந்த தெரிவு நடவடிக்கைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்பதால் தெரிவு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்த வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாளில் மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கண்காணிப்பாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

இதையடுத்து, இப்பணிக்கு அக். 13ம் தேதி முதல் நவ. 14ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அதன்பிறகு, நேர்முகத்தேர்வு டிச. 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி, தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மாவட்ட ஆட்சியர், இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TNPSC GENERAL TAMIL ONLINE TEST 01

வாழைப்பூவில் உள்ள அசத்தல் நன்மைகள்.!

உடலுக்கு நன்மையளிக்குமென நாம் சாப்பிடும் காய்கறி, கனிகள் குறித்த ஆரோக்கிய பலனை அறிவது அவசியம்.

இன்று வாழைப்பூ குறித்த நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்.

வாழைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனிதர்களுக்கு பல்வேறு பயன்களை வாரி வழங்குகிறது. வாழைப்பூவில் இருக்கும் மருத்துவ குணங்களால் நமது உடல்நலம் மேம்படுகிறது.

வாரத்திற்கு 2 முறை வாழைப்பூவை சமைப்பது சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் கலந்திருக்கும் உடலுக்கு தேவையில்லாத கொழுப்புகள் கரைத்து வெளியேற்றப்படும்.


இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்த ஓட்டத்தில் சீரான இயக்கம் ஏற்படும். வாழைப்பூவின் உவர்ப்பால் இரத்த சர்க்கரை பொருட்கள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

அதனைப்போல, இரத்த சர்க்கரை அளவு குறையும். செரிமானம் அதிகரிக்கும். வயிற்றுப்புண்கள் குணமாகவும். மூல நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் சரியாகும். சீதபேதி கட்டுக்குள் வரும். வாய்புண் பிரச்சனை மற்றும் துர்நாற்றம் நீங்கும்.

கொலஸ்ட்ரால் தொல்லையால் அவதிபடுறீங்களா? இந்த 4 வழிகளை பின்பற்றுங்க!

பொதுவாக உடலுக்கு கொழுப்பு சத்து என்பது அத்தியாவசியமான ஒன்றுதான், அது அளவுக்கதிகமாக இருக்கும்பொழுது தான் நமக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும், ஒன்று ஹெச்டிஎல் அதாவது நல்ல கொலஸ்ட்ரால் மற்றொருன்று எல்டிஎல், இது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். அதிகளவிலான எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவதால் நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது, இது உடலுக்கு ஆபத்தானது. ஆனால் நல்ல கொலஸ்ட்ரால் உடலில் இருப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது, குறிப்பாக இதய சம்மந்தமான நோய்கள் ஏற்படும் அபாயத்தை நல்ல கொலஸ்ட்ரால் குறைக்கிறது. நமது உடலில் நல்ல கொலஸ்டராலின் அளவை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

நியாசின் நிறைந்த உணவு :

நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும் ஒரு மருந்து வகை தான் நியாசின்(வைட்டமின் பி3), இவை நமது உடலிலுள்ள கெட்ட கொலஸ்டராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்டராலின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. நியாசின் சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது அதனால் மருந்து மூலமாக எடுத்துக்கொள்வது மட்டுமல்லாது நியாசின் நிறைந்துள்ள உணவை சாப்பிடலாம். விலங்குகளின் கல்லீரல், டூனா மற்றும் சால்மன் போன்ற மீன்களிலும், காளான், உருளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளிலும் நியாசின் நிறைந்துள்ளது.

உடற்பயிற்சி :

சுறுசுறுப்பான வாழ்க்கை முறை பல்வேறு நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது, அதிகமாக உடல் செயலில் ஈடுபடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் மட்டுமே உடலில் தங்கும். தினமும் 20-30 நிமிடங்களில் நடைப்பயிற்சி, ஓடுதல், கார்டியோ பயிற்சிகள் போன்றவற்றை செய்வதன் மூலம் பலனை பெறலாம்.

நட்ஸ் வகைகள் :

பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், நார்சத்துக்களும் நிறைந்துள்ளது. நார்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் தாங்குகின்ற கெட்ட கொழுப்புகள் முற்றிலும் குறைக்கபடுகிறது. முந்திரி சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதாக ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் எடை நிர்வகித்தல் :

உடல் எடையை வயதுக்கேற்ப சரியான அளவில் வைத்துக்கொள்வது நல்லது, உடல் எடை அதிகமாகி இருப்பவருக்கு இதயம் சம்மந்தமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்கள் உடலில் மூன்று சதவீதம் கொழுப்பை குறைப்பதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.

எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

2022-23 கல்வியாண்டிற்கான இளநிலை எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 2022, அக்டோபர் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவின் அடிப்படையில் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு (All India Quota Seats); மத்திய தொகுப்பு இடங்கள் (Central Pool Quota); மாநில தொகுப்பு இடங்கள் (State Government Quota Seats); மத்திய கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகம்; நிகர்நிலைப் பல்கலைக்கழகம்;எய்ம்ஸ்/ஜிப்மர் பல்கலைக்கழகம் ஆகிய பிரிவுகளின் கீழ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ்/பி.எஸ்.சி செவிலியர் படிப்புகள்:

எண் மாணவர் சேர்க்கை அகில இந்திய மருத்துவ மத்திய கல்வி நிறுவனங்கள்/ நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மாநில கலந்தாய்வு

1. முதல் சுற்று கலந்தாய்வு அக்டோபர் 11 முதல் 20 வரை அக்டோபர் 10 முதல் 20 வரை அக்டோபர் 17 முதல் 28 வரை

2. ஒதுக்கப்பட்ட இடத்தில் சேர்தல் அக்டோபர், 28 அக்டோபர், 28 நவம்பர், 4

3 இரண்டாம் சுற்று கலந்தாய்வு நவம்பர், 2 முதல் 10 வரை நவம்பர், 2 முதல் 10 வரை நவம்பர்- 7 முதல் 18 வரை

4 ஒதுக்கப்பட்ட இடத்தில சேர்தல் நவம்பர்,18 நவம்பர், 18 நவமபர், 21

5. விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வு (Mop Up Round) நவமபர் 23 முதல் டிசம்பர் 1 வரை நவமபர் 23 முதல் டிசம்பர் 1 வரை டிசம்பர் 6 முதல் 12 வரை

6. ஒதுக்கப் ஒதுக்கப்பட்ட இடத்தில் சேர்தல் டிசமபர் 10 டிசம்பர், 10 டிசம்பர் 16

7. விடுபட்ட இடங்களுக்கான இரண்டாவது களந்தாய்வு (Stray Vacancy) டிசம்பர் 12 முதல் 14 வரை டிசம்பர் 12 முதல் 14 வரை
 
8 காலி இடங்களுக்கு 1: 10 பேர் என்ற விகிதத்தில் தகுதியான நபர்களை நிகர்நிலைப் பல்கலைகழகத்திடம் சமர்ப்பித்தில் டிசம்பர் 14
 
9 ஒதுக்கப்பட்ட இடத்தில் சேருதல் டிசம்பர், 20 டிசம்பர், 20 டிசம்பர், 20

10 2022 கல்வியாண்டு தொடங்கும் நாள் நவம்பர் 15 நவம்பர் 15 நவம்பர் 15

15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு, மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள 100% இடங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், எய்ம்ஸ்/ஜிப்மர், தன்னாட்சி பொருந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனர்/மருத்துவ கலந்தாய்வு குழு நடத்தும்.

அதேபோன்று, மாநில அரசு மருத்துவக் கல்லூரிக்கான 85% மாநில ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட அதிகாரம் கொண்டவர்களின் (Competent Authority) பரிந்துரையின் படி அமையும். அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலின் படி, மாநில அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஓசி" பஸ் டிராமாவுக்கு "ஃபுல்ஸ்டாப்".. இலவசம் பிடிக்கலயா? "பணம்" வாங்குங்க -நடத்துனர்களுக்கு அட்வைஸ்

இலவச பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணிக்க விரும்பும் பெண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நடத்துனர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

அதில், "உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்." என்றார்.

ஓசி டிக்கெட் வேண்டாம்

இதனிடையே கடந்த சில நாட்கள் முன்பாக கோவை அரசு பேருந்து ஒன்றில் நடத்துனரிடம் மூதாட்டி ஒருவர் கட்டணம் கொடுத்து டிக்கெட் கேட்டார். அதற்கு நடத்துனரோ , இது இலவச பேருந்துதான் கட்டணம் வேண்டாம் என்று கூற, "தமிழ்நாடே ஓசியில போகட்டும், நான் ஓசியில் போக மாட்டேன். எனக்கு கட்டணம் பெற்று டிக்கெட் கொடுங்கள் என்று கூறியது பரபரப்பை கிளப்பியது.

டிராமா

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட நிலையில், திமுக செய்தித்தொடர்பாளர் ராஜீவ் காந்தி "கோவை அதிமுக IT WING -ஐ சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்!" என்று பதிவிட்டார்,

வழக்குப்பதிவு

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வீடியோவை வெளியிட்டது அதிமுகவை சேர்ந்த பிருத்விராஜ்தான் என்பது உறுதியானது. இதனை அடுத்து மதுக்கரை போலீசார் பிருத்விராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது அவதூறு பதிவு செய்தது. இதற்கு அதிமுகவின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வாய்மொழி அறிவுறுத்தல்

இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்றவற்றை தடுக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவை நடத்துனர்களுக்கு வழங்கி இருக்கிறது. அதன்படி, இலவச பேருந்து பயணத்தை விரும்பாத பெண்களிடம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பெருகிவரும் கோச்சிங் சென்டர்கள்: தமிழக அரசு முறைப்படுத்த கோரிக்கை

தமிழகத்தில் அரசு பணிகள் பெரும்பாலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், காவலர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ படிப்பிற்கு நீட் போன்றவை மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலமே தேர்வு செய்யப்படுகிறது.

இத்தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கோச்சிங் சென்டர்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பல தகுதியானவையாக இல்லையென்றும், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை மூளை சலவை செய்து லட்சக்கணக்கான ரூபாய்களை பிடுங்கி விடுவதாகவும், தற்போது புகார்கள் வருகின்றன. இம்மையங்களை ஒழுங்குபடுத்த வேண்டுமென தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், பெற்றோர்களின் ஆசை, அறியாமைகளை பயன்படுத்தி கோச்சிங் சென்டர்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்படுகிறது. குறிப்பாக நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கை அளவிட முடியாத அளவிற்கு தோன்றி உள்ளது. தவிர போலீஸ் தேர்வுகள், டெட் தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் போன்ற பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்தவுடன் முதலில் இலவசம் என துவங்கி, பின், படிப்படியாக பணம் பிடுங்கப்படுகிறது.

இங்கு முறையாக பாடம் நடத்தப்படுகிறதா?, தகுதியான பயிற்றுநர்கள் உள்ளனரா? என்பதை அரசு கவனிக்க வேண்டும். தமிழகத்தில் புற்றீசல்கள் பெருகி வரும் கோச்சிங் சென்டர்களை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, October 3, 2022

சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் எப்போது? விரிவான வழிபாட்டு விளக்கங்கள்!

நாளை சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் 9-ம் நாளான இந்தப் புண்ணிய தினத்தில் அம்பாளை எப்படி வழிபட வேண்டும், இன்று சரஸ்வதி தேவிக்கு என்ன சிறப்பு, சரஸ்வதி பூஜை செய்வது எப்படி, பூஜையில் ஏடு அடுக்கும் - பிரிக்கும் நேரம் என்னென்ன, சரஸ்வதி பூஜா பலன்கள் குறித்து புராணங்கள் என்ன சொல்கின்றன...
விரிவாகத் தெரிந்துகொள்வோமா?

பவிஷ்ய புராணம் சொல்லும் ரகசியம்!

`அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பார் ஒளவை. தைத்திரீய உபநிஷதமும் 'மாதாவை தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவை தெய்வ மாகக் கொள்வாயாக' என்றே அறிவுறுத்தும். இங்கேயும் முதலில் அம்மாதான்.

இப்படித் தாயாரை தெய்வமாக நினைக்க முடியுமானால் தெய்வத்தைத் தாயாராக நினைக்கமுடியும் அல்லவா? அங்ஙனம் ஆதிசக்தியை நம் அம்மாவாகக் கருதி வழிபடும் நாள்களே நவராத்திரி தினங்கள். இந்த ஒன்பது தினங்களும் அம்பிகையைப் பக்தியோடு வழிபடும் அன்பர்களுக்குத் தேவர்களுக்குக் கிட்டாத இன்பமும், செல்வபோகமும், பிணி இல்லாத வாழ்க்கையும் வரமாகக் கிடைக்கும்.
சரஸ்வதி அம்மன்

9 நாள்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி மூன்று நாள்களில் வழிபட வேண்டும். அதுவும் இயலாதவர்கள் நவமி தினத்தில் மட்டும் அம்பாளை வழிபட்டு பலன் அடையலாம். இதனால் துன்பமே இல்லாத வாழ்க்கை அமையும் என்கிறது பவிஷ்ய புராணம்.

நவமித் திருநாளில் என்ன செய்ய வேண்டும்?

நவராத்திரியில் 9-ம் நாளான நவமி அன்று சும்ப- நிசும்பர்களை வதம் செய்யத் தோன்றிய காமேஸ்வரி எனும் சிவசக்தி கோலத்தில் அம்பாளை வழிபடுவார்கள். இந்தத் தினத்தில் 10 வயதுள்ள பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டுமாம். இதன் மூலம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இந்தத் தினத்தில் அம்பாள் திருவுருவப் படத்துக்கு அடுக்கு மல்லி, நந்தியாவட்டை மலர்களைச் சமர்ப்பித்து வழிபடலாம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம்.

மட்டுமன்றி ஒன்பதாம் நாளான இந்த நவமி தினத்தையே சரஸ்வதி பூஜையாகவும் கொண்டாடுகிறோம்.
சரஸ்வதி தேவி

சரஸ்வதி பூஜை ஏன், வழிபடுவது எப்படி?

ஆதிசக்தியின் அம்சம் மகா சரஸ்வதியாகத் தோன்றி அருள்பாலித்த புண்ணிய தினம் என்பதால், நவராத்திரி நவமி (மூல நட்சத்திரம் இணைந்த) நாள் கலைவாணிக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். உரிய சுபவேளையில் சரஸ்வதி தேவியை புத்தகம், படம், விக்ரகம் அல்லது கலசத்தில் ஆவாஹனம் செய்யலாம்.

பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை அடுக்கி, பட்டாடை போர்த்தி அதன்மீது கலைவாணியின் விக்கிரகம், படம், கலசம் வைத்து வழிபடலாம். முறைப்படி பிரார்த்தனை சங்கல்பம் செய்து வணங்குதல் வேண்டும்.

படமோ, விக்கிரஹமோ, கலச ஸ்தாபிதமோ மலர்களால் அலங்கரித்து, சந்தனக் குங்குமத் திலகம் இட்டு அலங்கரிக்க வேண்டும். கனி வகை களையும், சுண்டல், பொங்கல் பிரசாதங்களையும் நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கலாம்.

சரஸ்வதி தேவி மகிமைகள்

நங்காய் நங்காய் நமோஸ்து

ஞானக் கொழுந்தே நமோஸ்து

கல்விக்கரசி நமோஸ்து!

கணக்கறி தேவி நமோஸ்து!

சொல்லும் பொருளே நமோஸ்து!

சூட்சுமரூபி நமோஸ்து!

- என்று போற்றித் துதி செய்து மலர்களால் அர்ச்சித்தும், சரஸ்வதி கலம்பகம் முதலான துதிப்பாடல்களைப் பாடியும் குடும்பத்துடன் சேர்ந்து வணங்கவேண்டும். பின்னர் தூப-தீப ஆராதனைகள் செய்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட் களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.
சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை உகந்த நேரம்நாளை (புரட்டாசி - 17) 4.10.22 செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் 9 மணி வரையிலும் சுக்ர ஓரை காலம் உகந்தது.மாலையில் பூஜிக்க வேண்டும் எனில், மாலை 7 முதல் 8 மணிக்குள் குரு ஓரையில் ஏடு அடுக்கி வழிபடலாம்.

விஜயதசமி பூஜை:

5.10.22 அன்று (புரட்டாசி -18) புதன் கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் பூஜை செய்து ஏடு பிரிக்கலாம். புதன் கிழமை தசமித் திருநாளில் புரட்டாசி திருவோணமும் சேர்ந்து வருவதால் ஹயக்ரீவருக்கும் உகந்த நாள் இது. ஆகவே இந்த வருடம் தசமியில் விநாயகர், சரஸ்வதி தேவி, ஹயக்ரீவர் ஆகிய மூவரையும் வழிபட்டு அருள்பெறலாம்.

என்ன பலன் கிடைக்கும்?

வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவு தெய்வம் என்று சரஸ்வதிக்கு உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். எல்லாவிதமான இகபர நலன்களும் வழங்கும் அம்பிகை விசேஷமாக வாக்குவன்மையும் அருள்கிறாள். ஏனெனில் அவளே அக்ஷர ரூபமானவள்.இன்று அந்த அன்னையை வழிபடுவதால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம். பிள்ளைகள் பிடித்தமான கல்வித் துறைகளில் பெரும் வெற்றியோடு ஜொலிக்க முடியும். மட்டுமன்றி தனம், தானியம், நிலை யான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சுவர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக் கூடிய வழிபாடு இது!

''அப்போ கவர்மெண்ட் ஸ்கூல் சுகாதாரமா, நீட்டாவே இருக்கக் கூடாதா?''-கிராம சபை கூட்டத்தில் கண்ணீர் விட்ட தலைமை ஆசிரியை

கிராம சபை கூட்டத்தில் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு அடிப்படை வசதிகளே இல்லை என கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை அடுத்துள்ளது சாலமரத்துப்பட்டி ஊராட்சி. அங்குள்ள ஓலைப்பட்டி எனும் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஓலைப்பட்டி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பெண் தலைமை ஆசிரியை, ''பள்ளியில் மீட்டர் பெட்டி போய்விட்டது. 

இரண்டு கட்டிடங்கள் இருக்கிறது ஒரு கட்டிடத்தில் தான் மீட்டர் பெட்டி உள்ளது. இன்னொரு கட்டிடத்தில் மீட்டர் பெட்டி இல்லை. அதனால் 50 மீட்டர் தூரத்திற்கு வயர் கனெக்ஷன் கொடுக்க வேண்டும். வயர் கனெக்ஷன் கொடுத்தாலும் ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு கூட தாங்குவது கிடையாது. குரங்கு பிச்சுப் போட்டுவிடுகிறது அல்லது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுகிறது. இது போன்று வயர் டேமேஜ் ஆனால் கட்டிடத்தில் எர்த் அடிக்கிறது. இதில் பசங்களுக்கு ஏதாவது ஆச்சு என்றால் யார் பதில் சொல்வார்கள். இது தொடர்பாக பிடிஓ ஆபிசுக்கு சென்று கடிதம் கொடுத்தேன். 

அதற்கு பிடிஓ சொன்னார் 'இதற்கு 25,000 ரூபாய் செலவாகும். இதெல்லாம் செய்ய முடியாதம்மா. நீங்க எடுத்துட்டு போயிட்டு நீங்கள் ஏதாவது வருமானம் வந்துச்சுன்னா பார்த்து செஞ்சுக்கோங்க' என்று. நாங்கள் என்ன கமிஷனா வாங்குறோம். அதிகாரிகளிடம் முறையிட்டால் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்க சொல்கிறார்கள். ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

சேதமடைந்த பள்ளி காம்பவுண்ட்டை ஜேசிபி வைத்து இடிக்க முடியாது மேனுவலாகதான் இடிக்க முடியும் என சொன்னார்கள். அந்த இடம் புல், புதர்கள், முள்ளு செடிகளாக இருக்கிறது. பாம்பு அந்த வழியாக ஜன்னலில் ஏறி வருகிறது. நான் என்ன செய்வது. எங்களுக்கு நல்ல காம்பவுண்ட் கட்டி தர வேண்டும் என்று கடிதம் கொடுத்தேன். அதுவும் நடக்கவில்லை. 

நான் வந்த உடனே பில்டிங் அழுக்காக இருக்கிறது, சுகாதாரமாக இல்லை என்பதற்காக ஐம்பதாயிரம் என் கை காசு செலவு செய்த செய்து பெயிண்டிங் செய்தேன். இப்பொழுது ஒரு பில்டிங்கிற்கு கமிஷனர் அம்மா பெயிண்ட் பண்ணி கொடுத்தாங்க. அதுவும் ஒரு கோட் தான் அடிப்போம் இரண்டு கோட் எலிஜிபிள் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போ கவர்மெண்ட் ஸ்கூல் சுகாதாரமாக இருக்கக் கூடாதா? நீட்டாவே இருக்கக் கூடாதா? சாபக்கேடா கவர்ன்மென்ட் ஸ்கூல் என்றால். பேசாமல் விஆர்எஸ் கொடுத்துட்டு போயிடலாம். ஒவ்வொருத்தர்கிட்டயும் கெஞ்சிகிட்டு இருப்பதை விட'' என்று கண்ணீர் விட்டார்.

'ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை நேரடியாக ஆசிரியராக அமர்த்த வேண்டும்'-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

'தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க அரசு முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 9 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாத தமிழக அரசு தான் இதற்கு காரணம் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை அதனடிப்படையில் ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்; போட்டித் தேர்வுகளை நடத்தக்கூடாது என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; அதை தமிழக அரசு ஏற்க மறுப்பது நியாயமற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தொடக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலும், பின்னர் 10-ஆம் வகுப்பு வரையிலும் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது தான் தகுதி ஆகும். 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதே நிலையே இப்போதும் தொடர வேண்டும் என்பது தகுதித் தேர்வில் வென்றவர்களின் கோரிக்கை.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதற்கு போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற விதி 2018&ஆம் ஆண்டு முந்தைய ஆட்சிக்காலத்தில் தான் திணிக்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து வெயிட்டேஜ் முறையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாகத் தான் 20.07.2018 -தேதியிட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை கொண்டு வந்தது.

அதாவது ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால், அவர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர் ஆவார்; ஆனால், ஆசிரியர் பணி அவரது உரிமை இல்லை; அதற்கு அவர் போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பது தான் அரசாணை 149-இன் பொருள் ஆகும். 2018-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை இப்போது தான் முதன்முறையாக செயல்படுத்தப்படுகிறது. ஒரே பணிக்கு இரு தேர்வுகளை நடத்துவது அந்தத் தேர்வுகளையே சந்தேகிக்கும் செயலாகும். இது கூடவே கூடாது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பணி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி ஆகும். அதற்கு ஒரே ஒரு போட்டித் தேர்வு மட்டும் தான் நடத்தப்படுகிறது. அதை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தால் எந்தத் தேர்வும் இல்லாமல் பணி வழங்கப்படுகிறது. ஆனால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித்தேர்வு, பின் போட்டித்தேர்வு என இரு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? 2018-ஆம் ஆண்டில் அரசாணை 149 பிறப்பிக்கப்பட்ட போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். அவ்வாறு எதிர்க்கப்பட்ட அரசாணையை அவரது அரசு இப்போது செயல்படுத்துவது நியாயமற்றதாகும்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை போட்டித் தேர்வின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்ற அரசாணை தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். எனவே, அரசாணை எண் 149-ஐ செல்லாது என்று அறிவித்து விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நேரடியாக இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Sunday, October 2, 2022

ரூ.5 ரூபாய் நாணயம் போட்டால் 20 லிட்., சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூர் கிராமத்தில், மாநில நிதி குழு மானியத்தில், 2018 - 19ம் ஆண்டு, 7.96 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.பின், கொரோனா காலத்தில் அதன் பயன்பாடு குறைந்து விட்டது.

சுத்திகரிப்பு இயந்திரமும் பழுதானதால் கிடப்பில் போடப்பட்டது.தற்போது பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 5 ரூபாய் நாணயம் போட்டால், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள இந்த திட்டத்தில் கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். 5 ரூபாய் நாணயம் போட்டால் 20 லிட்டர் தண்ணீர் வரும், பின் தானாக நின்று விடும். தண்ணீரை யாரும் வீணாக்க முடியாது.

யார் வேண்டுமானாலும் தண்ணீரை பயன் படுத்தி கொள்ளலாம்.கிராமத்தில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியின் போது அவர்கள் குடும்பத்திற்கு தேவையான குடிநீர் பிடித்து கொள்ளலாம்.அந்த முறை கிராம மக்கள் மட்டும் பயன்படுத்த முடியும். வெளி மக்கள் அவ்வாறு பிடித்து செல்ல அனுமதி கிடையாது.கடந்த ஆண்டு மழையின் போது குடிநீர் குழாய்கள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அப்போதுஇந்த தண்ணீர்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பராமரிக்க ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும்

அரசு ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை அரசு முறையாக வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். அரசு ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை அரசு முறையாக வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: வறுமையால் கல்வியைத் தொடர முடியாமல் மகன் தற்கொலை செய்ததால் விரக்தி அடைந்து வீட்டைவிட்டு வெளியேறி பிச்சை எடுக்கும் ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரிக்கு சேர வேண்டிய ஓய்வூதிய தொகையை 6 வாரத்தில் வட்டியுடன் வழங்க உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன். தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தை சோந்த கோபால் வேளாண் உதவி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவா். கூட்டுறவு சங்கத்தில் கடன் நிலுவையில் இருந்ததால், அவருக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டதோடு அவரது மகன் தற்கொலை செய்து கொண்டாா்.

கோபாலின் 2 மகள்களுக்கும் 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் கூலி வேலைக்கு செல்கிறாா்கள். இதனால் விரக்தி அடைந்த அவா், வீட்டை விட்டு வெளியேறி கோயில்களில் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறாா். ஒரு அரசு அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என்பது இங்கு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதனால், உண்மையாக உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.